செந்தமிழ் போற்றுவகைச் சீராக வாழ்வோமே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் / காய் 3)

நந்தனம் பெருகிடவே நமையீன்ற பெற்றோர்க்கு
வந்தனஞ் சொல்லிடுவோம் வாழ்வுள்ள காலமட்டும்!
உந்துதற் கூடிவரு முலகெல்லா முள்ளவரை
செந்தமிழ் போற்றுவகைச் சீராக வாழ்வோமே!

- வ.க.கன்னியப்பன்

நந்தனம்: சந்தோசம்; (எ. கா) நந்தன முறுவதிந்த நகரம் (விநாயகபு. திருந. 128)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Oct-23, 12:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே