ஏழில் வண்ணங்கள் வானவில்

ஏழில் வண்ணங்கள்
வானவில்
ஆறு நீராய் பெருகிவரின்
காவிரி கங்கை
ஐந்தில் ஒளிர்ந்திடும்
அவன் நாமம்
நாலில் அறையும்
நான்மறை வேதம்
மூன்றில் எரிந்திடும்
கனல் நெருப்பு
இரண்டில் இருவர் இணைய
அவள் பாதி அவன் பாதி
ஒன்றில் எல்லாம்
முற்றிலும் முழுதும் அடங்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Oct-23, 8:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 22

மேலே