கவிஞர் இராஇரவி தரும் கட்டுரைக் களஞ்சியம் நூல் விமர்சனம் கவிஞர் வசீகரன், ஆசிரியர் பொதிகை மின்னல்
கவிஞர் இரா.இரவி தரும்
கட்டுரைக் களஞ்சியம்!
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
*****
தெளிந்த தமிழ்ப்பற்று மிக்கவர் கவிஞர் இரா.இரவி. தமிழ்ச்சேவையாற்றுவதில் ஓயாத தேனீ. இணையம், புலனம், வலைத்தளங்கள் என பல வழிகளிலும் தமிழ் பரப்பியும், தமிழர் நலம் சார்ந்தும் பதிவிடுவதோடும், நூல்களாகவும் குவிப்பார். அந்த வகையில் கட்டுரை நூலாக வந்திருக்கிறது அவரது 31ஆவது நூல்.
38 கட்டுரைகளைத் தொகுத்து “கட்டுரைக் களஞ்சியம்” ஆக தந்து இருக்கின்றார். அத்தனைக் கட்டுரைகளும் தமிழ், தமிழ் என்றே பேசுகின்றன. தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் குறித்து கட்டுரைகளை ஆக்கித்தந்து நமக்கு உணர்வூட்டுகிறார். முதல் கட்டுரை கக்கன் ஐயா அவர்களின் எளிய, நேர்மையான வாழ்க்கையை நமக்குச் சொல்லித் தருகிறது. இப்படி ஒரு அரசியல்வாதியா! என்று வியக்க வைக்கிறது. பொதிகை மின்னலில் எழுதிய வெ. இறையன்பு. கு.ஞானசம்பந்தன். வானதி இராமநாதன் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் அழகு, தமிழ் இலக்கியத்தில் பொறுமை என தமிழாய்வுக் கட்டுரைகளும் தேன் சிந்துகின்றன. “உலக இலக்கியங்களில் தலையாய இலக்கியம் தமிழ் இலக்கியம், தமிழுக்கு நிகரான இலக்கியம் உலகில் இல்லவே இல்லை” என்று முரசறைகிறார் இரா.இரவி. “வாழவாங்கு வாழ தேவை மனவளம்” என்னும் கட்டுரை தந்து “தோல்வியில் துவளாத உள்ளம் வேண்டும்” என்கிறார். வெ.இறையன்பு சுட்டுவது போல் இயங்கிக்கொண்டே இருக்கும் சிறந்த பண்பாளர் நூலாசிரியர்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 206 பக்க நூல், வெறும்
200 ரூபா தான்.