இராவணன் சூலம் மழு முதலியன எறிந்தாவது கும்பகருணனை எழுப்புக எனல் - கொச்சகக் கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 சீர்களில் மோனை)
இடைபேரா இளையானை, இணைஆழி மணிநெடுந்தேர்
படைபேரா வரும்போதும், பதையாத உடம்பானை,
மடைபேராச் சூலத்தால், மழுவாள்கொண்(டு) எறிந்தானும்,
தொடைபேராத் துயிலானை துயிலெழுப்பிக் கொணர்கவென்றான்! 55
- கும்பகருணன் வதைப் படலம், யுத்த காண்டம், கம்பராமாயணம்