நாலாயிர திவ்ய பிரபந்தம், முதல் ஆயிரம்
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல்
தரவு கொச்சக கலிப்பா
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்கம் இடத்தான்தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே! 1