இசை

வயல்வெளியினில் களையெடுத்து
களைப்படைந்த முகத்தினுக்கோ
தேகம் பட்டு வருடி விடும்
தென்றலும் ஓர் இசைதான்

பகல் முழுதும் பட்டறையில்
பழகிப் போன கண்களுக்கோ
இரவு தூங்கும் கும்மிருட்டில்
கடிகார டிக் இசைதான்

அதிகாலை துயிலெழுந்து
அந்தி மாலை மீன் இழுக்கும்
மீனவனின் செவிகளுக்கோ
கடலலை ஓர் இசைதான்

எட்டு வைத்து நடை பழகும்
எட்டடியில் குடை கவிழும்
மழலை பேச்சு பேசுமந்த
தாதாதிதீ இசைதான்

பள்ளி முடிந்த வேலைப் பார்த்து
பக்கம் வீட்டு தெருவில் கேட்கும்
ஐஸ் வண்டி எழுப்பி வரும்
ஐஸ் ஐஸ் ஓர் இசைதான்

அடுத்த வீட்டு அக்கா அங்கு
அமர்ந்து தேய்க்கும் பாத்திரத்தில்
பொன் வளையல் பட்டெழுப்பும்
ஜல் ஜல் ஓர் இசைதான்

அண்டை தேசம் செல்லுகையில் அந்நிய மொழி கலப்பிருக்க
தாய்மொழியில் சத்தங் கேட்டால்
தமிழும் ஓர் இசைதான்

காது கேளா மனிதருக்கோ
கடவுள் வரம் தந்துவிட்டால்
கேட்கும் ஒலி ஒவ்வொன்றுமே
அவனுக்கு அது இசைதான்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (1-Dec-23, 6:07 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : isai
பார்வை : 99

மேலே