அர்த்தமில்லாப் பெயர்கள்

ஐயா சோதிடரே, என் பேரன் மனைவிக்கு முதல் மகப்பேறிலே மூணு குழந்தைகள் பிறந்திருக்குது. இப்பெல்லாம் இந்திப் பேரு மாதிரி உள்ள பெயர்களை உருவாக்கி பிள்ளைகளுக்கு வைக்கிறது வாடிக்கையா இருக்குது. குழந்தைகள் மூணும் நேற்று காலை பத்தரை மணிக்குப் பிறந்தாங்க. அவுங்க சாதகக் குறிப்பு எழுதி நீங்களே மூணு பேருக்கும் இந்திப் பேரு மாதிரி உள்ள அர்த்தம் இல்லாத பேருங்கள வச்சிடுங்க.
@@@@@@@@@@
(சோதிடர் பத்து நிமிடம் கணித்துப் பார்த்துவிட்டு): பிள்ளைகள் மூணும் பிறந்த நேரம் மிக நல்ல நேரம். அர்த்தமில்லாத, இந்தி பேரு மாதிரி உள்ள பேருங்கள வைக்கச் சொல்லறீங்க. அவுங்க பேருங்கள் சாதகக் குறிப்பில எழுதிட்டேன். கேளுங்க அம்மா. 'அன்சார், உன்சார், என்சார்'.
@@@@@@

ரொம்ப நன்றிங்க ஐயா.

எழுதியவர் : மலர் (1-Dec-23, 10:09 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 67

மேலே