அரசியல் துறவி
ஏண்டா மகனே திருமணம் வேண்டாம்னு சொல்லற? உனக்காக நாங்கள் எவ்வளவு சொத்து சேர்த்து வச்சிருக்கிறோம். எங்களுக்கு ஒரே பிள்ளை நீ. இந்த சொத்தையெல்லாம் யாருடா அனுபவிக்கிறது?
@@@@@@
நீங்க சம்பாதிச்சு வச்சிருக்கிற சொத்தை அனுபவிக்க நான் துறவறம் மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
@@@@@@@@@@@
துறவறம் மேற்கொள்ள சொத்து எதுக்கு மகனே?
@@@@@@@
நம்ம நிலம் ௧௦௦ ஏக்கர்ல ஆசிரமம். இயற்கை வேளாண்மையும் ஆன்மீகமும் சேர்ந்த ஆசிரமம். முக்தியானந்தா என் ஆன்மீகப் பெயர். நூற்றுக்கணக்கான சீடர்களையும், சீடிகளையும் ஆசிரமத்தில் சேர்க்க பிரச்சாரம் செய்யவேண்டும். மாதம் பத்தாயிரம் சம்பளத்துக்கு ௫௦ பேரை பிரச்சார வேலைக்கு அமர்த்தணும். என்னிடம் ஆசி வாங்க வருபவர்களுக்கு இலவச உணவு தங்குமிடம் அளிக்கவேண்டும். இப்படித்தான் சில சாமியார்கள் செய்த்ததாகச் சொல்லப்படுகிறது. என் மீது அதிக பக்தி கொண்ட பணக்கார பக்தர்கள் அவர்கள் சொத்தை ஆசிரம்த்துக்கு எழுதி வைத்துவிட்டு ஆசிரமத்திலேயே குடும்பத்துடன் தங்கிவிடுவார்கள். நான் பிரபல சந்நியாசி ஆனதும் ஆன்மீகத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சியில் சேர்ந்து ஒரு மாநில முதல்வராவதே எனது குறிக்கோள்.
@@@@@@@
மகனே, தவறு சாமி நீங்க நாங்க நெனச்சதைவிட பலமடங்கு மேல நிக்கறீங்க. நாங்களும் உங்க ஆசிரமத்தில தங்கிடுவோம். குடும்ப வாழ்க்கையை நிராகரிக்கறயே. அதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது.
@@@@@
நான் திருமணத்தைத் தான் தவிர்க்கிறேன். மற்றபடி எனக்கு எல்லா சுகபோகமும் உண்டு. நித்திக்கும் முக்திக்கும் உள்ள ஒரே வேறுபாடு. அரசியல். அவர் ஒரு தீவை ஆள்கிறார். நான் ஒரு மாநிலத்தை ஆள முடிவு செய்துவிட்டேன். இறுதியான உறுதியான முடிவு.
@@@@@@@@@
(தாய் தந்தை இருவரும் முக்தியானந்தா காலில் விழுந்து): சாமி, எங்கள் இறுதிக் காலம் நோய் நொடியின்றி இயறகை வேளாண்மையில் கிடைக்கும் உணவை உண்டு உங்கள் அரசியல் ஆன்மீக வாழ்க்கையைக் கண்டு மகழ்ச்சியாக வாழ ஆசி வழங்குங்கள்.
@@@@@@@@
என் முதல் பக்தர்களே நீங்கள் இருவரும் உங்கள் எண்ணப்படி வாழ இறைவன் அருள் புரிவார். இந்த புனித நீரை அருந்துங்கள்