கவியும் இமையில் காதலின் புத்தகம் திரும்ப

குவிந்த இதழில் குறுநகை சித்திரம் தீட்ட
கவியும் இமைகளில் காதல் புத்தகம் திரும்பிட
தவழ்ந்திடும் கூந்தல் கார்முகில் போல்கலைந் தாட
சிவந்த இதழ்கள் செந்தமிழ்க் கவிதை சொல்லுதடி
குவிந்த இதழில் குறுநகை சித்திரம் தீட்ட
கவியும் இமையில் காதலின் புத்தகம் திரும்ப
தவழும் கூந்தல் கார்முகில் போல்கலைந் தாட
சிவந்த இதழ்கள் செந்தமிழ்க் கவிதையைச் சொல்லும்
---மேலே பல வாய்ப்பாட்டில் அமைந்த கவிதை
புளிமா மா விளம் விளம் மா எனும் ஒரே வாய்ப்பாட்டமைதியில்
அமைந்த கலித்துறையாக எதுகை மோனை அழகுடன்
குவிந்த இதழில் குறும்புச் சிரிப்பு
கவியும் இமைகளில் புத்தகம்போல் காதல்
தவழும் கருங்கூந்தல் கார்முகில்போல் ஆட
சிவந்த இதழ்கவி தை
----இன்னிசை வெண்பாவாக
குவிந்த இதழில் குறும்புச் சிரிப்பு
கவியும் இமைகளில் காதல் -- துவண்டு
தவழும் கருங்கூந்தல் கார்முகில்போல் ஆட
சிவந்த இதழ்கவி தை
----நேரிசை வெண்பாவாக