வாழ்க்கை என்னவோ…

வாழ்க்கை என்னவோ…!

ஒற்றை பாதையாய்
இருந்தவரை
ஒழுங்காகத்தான் இருந்தது

இரண்டாய் பிரித்து
வைத்த பின்னால்

பிரித்த வைத்த
இரண்டும்
தன்னருகில்
மற்றொரு பாதையை
சேர்த்து கொண்டது

பேர் என்னவோ
நாலு வழி சாலை

சேர்த்து கொண்ட
பாதை அதன்
அருகில் மற்றொரு
பாதையை
சேர்க்க போகிறதாம்


ஆறு வழி சாலையாம்..!

சாலைகள் பெருத்து
வாகனங்கள் பெருத்து..!

தனி மனித
வாழ்க்கை என்னவோ
இன்னும்
காலடி பாதையாகத்தான்
இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Dec-23, 8:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 96

மேலே