மிதக்கும் சென்னை
கேடு வருமேபின்
நேரிசை வெண்பாக்கள்
விளையும் நிலத்தை விலைக்கு பிடுங்க
களத்தில் அரசிறங்கக் கண்டோம் -- தளபதியின்
குண்டர்சட் டத்தால் குமுறும் விவசாயி
தண்டத் தளபதியைத் தள்ளு.
விளைநிலங்கள் தொழிற் பட்டறைக்கு விற்றால் தின்ன எங்கு விதைப்பாய்
தரிசு கரடு நிலம் போதாவோ தொழிலுக்கு... தொழிலதிபர்க்கு விலைபோகும் அரசு
அடித்துப் பிடுங்க வடிசோற்றுக் கெங்கு
பிடிப்பாய் விளைநிலப் பேய்
பீடுவாழ்க்கை வாழ பிறரைக் கெடுக்காதே
கேடு வரும்பின்னே கேள்
கொடுத்த பணத்தை உரைக்கா மறைத்து
படுபாவி தின்றாய் படைசேர் --- கொடுவான்
மழைநீர் வடிவாய்க்கால் கட்டவில்லை மாற்று
புழைசிறிதால் போகாப் புனல்
புழை===வழி
கொடுத்த 4000 கோடியில் மொத்தமாக சுருட்டி முதலீடு எங்கோ செய்த்தாய்
மழைநீர் வடிகால் செய்ய மறந்தாய்... மழைநீர் செல்லும் பழைய புழை (வழி) யும்
அடைப்பால் மூட அவமானம் உனக்கும் உலகில்
....