வந்துவிட்டாள்…
வந்துவிட்டாள்….
17 / 12 / 23
வீட்டில் நுழைந்தேன்.
வாசலில் ஷூ இரண்டும்
வடக்கில் ஒன்றும்
தெற்கில் ஒன்றாய்...
உருவிய சாக்ஸ்
மூலைக்கொன்றாய்...
புத்தகப்பை வாய்
திறந்து... கவிழ்ந்து
ஒரு மூலையில்....
களைந்த யூனிபார்ம்
சோபாமேல் பரவிகிடந்தது.
தலையில் இருந்த
கிளிப்புகளும் ஹேர் பின்களும்
கால்களில் குத்தின...
ஓ...
மகள் பள்ளியில்
இருந்து வந்துவிட்டாள்.