இசை எடுக்கும் வடிவு

இசை உயிர்கொண்டெழுந் தால் எப்படியெல்லாம் இருக்கும்
வசையாய் என்னவளின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய
ஒர்க்கட்டாயம்.. கொஞ்சம் யோசித்தேன் பின்னர் இப்படி
பதில் அளித்தேன்.... இசை மென்மையாய் மெல்லிசையை
உள்ளத்தைத் தொடும்படி இருந்தால் அது நிச்சயம்
ஒரு தெய்வப் பெண்ணுறுதாங்கிய வந்திடும் சரஸ்வதி தேவியாக ;
இசை கம்பீரமாய் அமைந்தால் அது ஒரு தேவனாய்
வடிவெடுக்கும் ......திருமாலாய் ;
அதுவே கர்ணகடூரமாய்....அளவுக்கு a
சப்தம் தருவதாய் இருந்தால் ஒரு ராக்ஷசனாய் உருவெடுக்கும் .................

நான் இசையில் எப்போதும் காண்பது சரஸ்வதிதான்
என்றேன் என்னவளும் மனம் குளிர்ந்தாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Dec-23, 2:22 pm)
பார்வை : 582

மேலே