நம் வாழ்வு
இவ்வுலகில் என் குணமறிந்து,திறனறிந்து
போற்றுவோர் கண்டு நான் பெருமிதம் கொள்வதும் இல்லை.
என் நன்னடை சற்று இடரினும்
தூற்றுவோர் கண்டு நான் துவண்டு போனதும் இல்லை.எனை போற்றிய வாய் தின்று என் புறம் வளர்வதும் இல்லை.தூற்றிய வாய் உண்டு என் அகம் நிறைவதும் இல்லை.(எனைச்சுற்றி பலர் உண்டு.அவர் உண்டு தீராதென் தரித்திரம்)என் சோறு உண்டு.என் வாய் உண்டு.அதில் உண்டு என் வாழ்க்கை வாழ்வதே நிரந்தரம்.அதுவே என் சுதந்திரம்.நாளை படைக்கலாம்
ஒரு சரித்திரம்.நம் நலமான சிந்தனை வழியில் நம் வாழ்வு நம் கையில்.👍