கொட்டிச் சிதறும் முத்துப் பேழையோ இதழ்கள்

கொட்டிச் சிதறும்முத் துப்பேழை யோஇதழ்கள்
வெட்டும்மின் னல்கீற்று வெல்லும் விழிகளோ
கட்டியபட் டுச்சேலை காற்றிலாட மாலையில்
தொட்டுச்சாய் வாள்எந்தன் தோள்
------இன்னிசை வெண்பா
கொட்டித்தான் சிதறும்முத் துப்பேழை யோஇதழ்கள்
வெட்டும்மின் னல்கீற்று வென்றிடுமுன் இருவிழியோ
கட்டியபட் டுச்சேலை காற்றிலாட மாலையிலே
தொட்டுச்சாய் வாள்எந்தன் தோள்மீது காதலிலே
--------முற்றிலும் காய் கலிவிருத்தம்
கொட்டித்தான் சிதறும்முத் துப்பேழை யோஇதழ்கள்
வெட்டும்மின் னல்கீற்று வென்றிடுமுன் இருவிழியோ
கட்டியபட் டிளம்சேலை இனியகாற்றி னிலாடிட
தொட்டுச்சாய் திடுவாள்என் தோள்மீதில் அழகினிலே
----காய் முன் நிரை நிறுத்தி ஏழு கலித்தளையால் மாற்றி அமைத்த
மாச்சீர் விளங்கனிச் சீர் வாரா தரவு கொச்சகக் கலிப்பா