நின்கூந்தலின் நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
நின்கூந்த லின்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரியும் வேளையிலே
கண்மயங்கி நீயுமே கேட்டிடுவாய் காதலிலே
பெண்மயிலே தோளினில் சாய்
-----இருவிகற்ப இன்னிசை வெண்பா
நின்கூந்த லின்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரியும் வேளையிலே
சின்னவளே நீயுமே கேட்டிடுவாய் காதலிலே
மன்னவனின் தோளினில்சாய் வாய்
----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
நின்கூந்த லின்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரிய-- புன்னகைச்
சின்னவளே நீயுமே கேட்டிடுவாய் காதலிலே
மன்னவனின் தோளினில்சாய் வாய்
----ஒருவிகற்ப நேரிசை வெண்பா
நின்கூந்தல் தன்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரியும் வேளையிலே
சின்னவளே நீவந்து கேட்டிடுவாய் காதலிலே
மன்னவனின் தோளினில்சாய் வாய்மகிழ்ந்து மாலையிது
----முற்றிலும் காய் மயமான கலிவிருத்தம்