காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 17

17. ஆனந்த இல்லம்


"ஆனந்த இல்லம்" முழுதுமே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. பெயரே ஆனந்த இல்லம், பின் ஆனந்தத்திற்கு தான் என்ன குறைவு வந்துவிடப் போகிறது.

அங்கு இருந்த ஒவ்வொருவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த இல்லத்தில் சமையல் செய்யும் வேதமூர்த்தி தன் முழு திறமையையும் பயண்படுத்தி நள பாகம் செய்து கொண்டிருந்தார். வடை பாயாசம் என்று கமகமக்கும் வாசனையுடன் சமையல் கலை கட்டியது.

ஒருபுறம் ஆனந்த இல்லம் முழுவதையும் அலங்கரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
கண்ணைக் கவரும் விளக்குகளும் இயற்கை வாசனையுடன் மலர்களுமாக சூழல் மிக ரம்யமாக மாறிக்கொண்டு இருந்தது.

ஆனந்த இல்லத்தின் உள்ளே நுழையும் போது வலப்புறத்தில் உள்ள பெரிய கூண்டில் அடைபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிளி மற்றும் விதவிதமான பறவைகள் கூட ஆனந்த இல்லத்தின் இன்றைய பரபரப்பை உணர்ந்து கீச்கீச் என்று பலவிதமான குரல்களை எழுப்பி ஆரவாரம் செய்து கொண்டிருந்தன.

இல்லத்தின் குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவான தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை, ரோஜா, இருவாச்சி, சாமந்தி,முல்லை என்று இன்னும் பலவகையான மலர்களும் என்றும் இல்லாத விதமாக இரட்டிப்பாக மணம் பரப்பி தங்கள் மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டு இருந்தன.

இவ்வளவு பரபரப்புக்கு நடுவே குறுக்கும் நெடுக்குமாக ஓடும் குழந்தைகளை அதட்டி ஓரமாக போய் விளையாடுமாறு கூறிக்கொண்டு இருப்பது யார் என்று தெரிகிறதா? வேறு யாரும் இல்லைங்க நம்ம யசோதம்மா தான் அவங்க.

காலையில் எழுந்ததில் இருந்து இல்லத்தின் தினசரி வேலைகள் உடன் மற்ற வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று பார்ப்பதும் அதற்க்கும் மேல் இந்தக் குழந்தைகளை கண்காணித்து பாதுகாப்பதுமாக பம்பரமாக சுற்றி வருகிறார்.

அந்த இல்லத்தின் தலைவி யசோதம்மாவின் உதவியாளராக பணிபுரியும் சுமத்ரா, கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல் நடமாடும் யசோதம்மாவுக்கு அறுபத்தைந்து வயது கடந்து மேலும் ஒன்பது மாதங்களும் முடிந்து விட்டன. ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனைக்கு விஜயம் செய்து வெற்றிகரமாக திரும்பி இருக்கும் இதய நோயாளி அவர். இருந்தும் யார் சொல் பேச்சும் கேட்காமல் அவர் இப்படி அலட்டிக் கொள்வதற்கு காரணம் இருக்கிறது.

அதுதான் "பிரியம்வதா" , இதே இல்லத்தில் பதினெட்டு வயது வரை வளர்ந்த மிகவும் பாசமான அன்பான பெண் அவள். அவளைப் பிடிக்காதவர்கள் யாரும் அங்கு இருக்க முடியாது. அனைவரிடமும் பண்புடன் பழகும் பிரியம்வதா அந்த இல்லத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையாக வந்து சேர்ந்தாள்.

ஆனந்த இல்லத்தில் பிரியம்வதா கால் பதித்த தினம் தான் இன்று. அந்த இல்லத்தின் வழக்கப்படி குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்படும் நாளையே அவர்களின் பிறந்த நாளாக கொண்டாடப்படும்.

அவளின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் தான் இவ்வளவு ஆர்வமாக நடைபெறுகிறது.

நீங்கள் முனுமுனுங்கறது எனக்கு நல்லாவே கேட்குது, ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு பெண்ணுடைய பிறந்த நாளுக்கு ஏன் இவ்வளவு தடபுடல் என்று தானே கேட்குறீங்க. அதற்க்கும் காரணம் இல்லாமல் இல்லை.

இயற்கையாகவே வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் இல்லத்தில் வளர்ந்து வரும் தன்னை விடவும் சிறிய குழந்தைகளை பாங்குடன் அவள் கவனிக்கும் அழகே தனி தான். தனக்குத் தெரிந்ததை எல்லாம் மற்றவர்களுக்கும் பொறுமையாக கற்றுத் தரும் அவளின் பெருந்தன்மையான குணம் யாருக்கும் வராது என்பது யசோதம்மாவின் கருத்து.

பிரியம்வதா இந்த இல்லத்தில் வளர்ந்த சாதாரணமான பெண் இல்லை படிப்பில் சிறந்து விளங்கிய அவள் பனிரெண்டாம் வகுப்புக்கு மேல் அரசின் உபகார சம்பளம் திட்டத்தின் உதவியுடன் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவள். அத்துடன் தற்போது அவள் இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய சிறந்த நரம்பியல் நிபுணர்களில் ஒருவரான பாரதிதாசனின் காதல் மனைவி.

அத்துடன் அந்த இல்லத்தில் வாரம் நான்கு நாட்கள் இலவச மருத்துவ பரிசோதனையும் மருத்துவமும் பார்த்து வரும் பரந்த உள்ளம் கொண்ட மருத்துவ ஜோடியும் இவர்கள் தான்.

இதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன பிரியம்வதா வின் முக்கியதுவத்திற்கு ஆனால் அதை எல்லாம் கதையின் ஓட்டத்துடன் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம் ஓகே.....

"பிரியம்வதா" என்கிற தன் காதல் மனைவியின் பிறந்த நாள் விழாவில், பிரபலமான நரம்பியல் நிபுணர்களில் ஒருவரான பாரதிதாசன் இமைக்கவும் மறந்து தன் மனைவியை பார்வையாலேயே ஆலிங்கனம் செய்கையில் கலெக்டர் வினோத் குமாரின் கார் திலோத்தமாவை சுமந்து கொண்டு வந்து ஆனந்த இல்லத்தில் நின்றது.


மீண்டும் சந்திப்போம்......

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (19-Dec-23, 9:31 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 23

மேலே