இராமன் தயரதனை நினைத்துப் புலம்புதல் - தரவு கொச்சகக் கலிப்பா

இராமன் தயரதனை நினைத்துப் புலம்புதல்!
தரவு கொச்சகக் கலிப்பா

நந்தா விளக்கனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனிஅறத்தின் தாயே! தயாநிலையே!
எந்தாய்! இகல்வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி,வாய்மைக்(கு) ஆர்உளரே மற்றென்றான்! 61

- விராதன் வதைப் படலம், ஆரணிய காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : கம்பர் (23-Dec-23, 7:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே