என்வீட்டுக்கு வரும் சைவ காக்கைகள்

என்வீட்டு சமையல் அரை ஜன்னலில்
நித்தியம் மதியம் பன்னிரண்டு மணி அளவில்
இரண்டு காகங்கள் வருகைத தருகின்றன
இறைவனுக்கு அன்றைய சமையல் பதார்த்தங்கள்
படைத்தபின், என் மனைவி இவ்விரண்டு காக்கைக்கும்
தன் கையால் மிகவும் சிரத்தையுடன் கெட்டி தயிர் சாதம்
கலந்து கவளமாக ஜன்னலுக்கு அப்புறம் வைக்க
அபக் அபக்கென்று சில நொடிகளில் இதை
சாப்பிட்டுவிடும் காக்கைகள்
அவை சுத்த செய்த காக்கைகள் போல
ஏனெனில் எதிர்வீட்டு அசைவர்கள்
வைக்கும் அசைவ உணவை இவை ஒருபோதும் ஏற்கவில்லை
அதனால் அவர்களும் எதுவும் போடுவதில்லை

என்வீட்டுக்கு வரும் காகங்களுக்கு தயிருக்கு பதில்
மோரில் கலந்த சாதமோ, சாம்பார் சாதமோ பிடிக்காது
அவை விரும்பி ஏற்பது 'கெட்டி தயிர் சாதம்' மட்டுமே !!

சைவ காக்கைகள்.......அதிசயம்
நாம் இயற்கையின் குப்பைக் கிளறி என்று நினைத்த
காக்கை இப்படியும் இருப்பது .......பூர்வஜென்மத்தில் இவை
சைவ மனிதராய் இருந்திருக்கலாம் என்றே
தோணவைக்கிறது !!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Dec-23, 11:52 am)
பார்வை : 20

மேலே