பழனிச்செல்வன் நினைவாக
27.12.௨௦௨௩
பணிகள் செய்வதில் வீரச்செல்வன்..
செய்து முடிப்பதில் வெற்றிச் செல்வன்..
முடிவுகள் எடுப்பதில் முத்துச் செல்வன்..
அத்தனை பேரிடமும் அன்புச்செல்வன்
அவர் நம் பழனிச்செல்வன்..
பழனிச்செல்வன்
தொழில் தெரிந்தவர்...
விழிகள் கருணை கொண்டவர்..
வழிகள் பல சொல்பவர்.. அவரோடு
எது பேசினாலும் இன்பமே
ஓடிப்போகும் துன்பமே...
எத்தனை எத்தனை ஆலோசனைகள்...
இனிய உரையாடல்கள்...
அழகிய ஹாஸ்யங்கள்
சேர்ந்து உணவருந்திய தருணங்கள்
அத்தனையும் அன்பின் வெளிப்பாடுகள்
பழனி... நீ செய்த மாபெரும்
உதவிகளின்.. ஒருங்கிணைப்பின்
அடித்தளங்களில் நிமிர்ந்து நிற்கிறது
நீ அமைத்துக் கொடுத்த
வசீகர சாம்ராஜ்யங்கள்...
அவை என்றும் உந்தன்
பெயர் சொல்லும்...
உன் தந்தை முத்தையா செட்டியார்
பெயரையும் சேர்த்து சொல்லும்..
இன்று நீ இல்லையெனும் போது
நெஞ்சம் வேதனையில் கனக்கிறது...
உந்தன் நினைவுகள் என்றும்
எம்மோடு இருக்கிறது...
கண்ணீர் அஞ்சலி...
அன்புடன்..
ஆர். சுந்தரராஜன்.
💐💐💐💐💐💐