உண்மை தவம் என்பது யாது
உண்மைத் தவம் மோனநிலையின் எல்லை
அதில் நீ, நான், அவன், எனது , அவனுடையது
போன்ற எண்ணங்கள் இல்லாது போகிறது
அந்த தவநிலையில் எல்லையில் ' நிர்வாணம்'
முக்தி அஃதாவது இறைவனோடு ஆன்மா
ஒட்டி உறவாடுதல்....இறைநிலை யாகும்
உடலோடும் உடல் தழுவும் ஆசாபாசங்கள்
நம்முள் உறையும் ஆத்மாவை அலைக்கடிக்கும்
நான்....இந்த உடல் அல்ல, ஜீவாத்மா என்பதை
அறிந்திட்டால், பரமாத்மா நமக்கு மெல்ல
தென்படுவான்......