புன்னகை சிந்தும் நடிகை புத்தெழுச்சியுடன் நடந்தாள்
தன்தலைமைக் கேயிவளால் கேடென்றெண் ணித்தலைவன்
புன்னகை யாளைப் புறம்தள்ளி னானென்றும்
நன்மை இவள்செய்வாள் நம்பிமக் கள்சொல்ல
புன்னகைசிந் தும்நடி கை
----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா எதுகை மோனைப் பொலிவுடன்
தன்தலைமைக் கேயிவளால் கேடென்றெண் ணித்தலைவன்
புன்னகையை புரிபவளை புறம்தள்ளி னானென்றும்
நன்மைநமக் கிவள்செய்வாள் நம்பிமக்கள் சொல்லிடவே
புன்னகைசிந் தும்நடிகை புத்தெழுச்சி பெற்றாளே
----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம் எதுகை மோனைப் பொலிவுடன்
தன்தலைமைக் கிவளாலே கெடுதியென தலைவணென்ண
புன்னகையை புரிபவளை புறம்தள்ளி னானென்றும்
நன்மைதனை இவள்செய்வாள் நம்பிமக்கள் அணிதிரள
புன்னகைசிந் தும்நடிகை புத்தெழுச்சி யுடன்நடந்தாள்
-----கலித்தளை மிகுந்த தரவு கொச்சகக் கலிப்பா