தேவையற்ற பிரச்சனைகள்

மிக நீண்ட பதிவு ) என்னுடைய இந்த வயதில்,   மனம்  பக்தியிலிருந்து சிறிது  விலகி ஆன்மீகத்தை நாடுகிறது. மதத்தைக் கடந்தது ஆன்மீகம் என்பது பலருக்கும் புரிவதில்லை.  இந்த உலகத்தில் என் இடம், நான் யார் என்று ஆலோசிப்பது தான் ஆன்மிகம்.
ஜெயமோகனின் ஒரு சிறு விளக்கம் : மதம் ஆன்மிகத்துக்கான பாதையாக இருக்கலாமே ஒழிய மெய்யான ஆன்மிகம் மதத்தை மீறியதும் மதத்தின் வரையறைகளுக்கு நேர் எதிரானதுமாகும். ஆன்மிக ஞானிகள் மதம்கடந்த ஆளுமைகளாக இருப்பதை எந்நிலையிலும் காணலாம். ரமணரானாலும் சரி நாராயணகுருவானாலும் சரி அவர்களை மதத்திற்குள் அடக்க இயலாது. ஆகவே ஆன்மிகம் என்பது மதம் அல்ல.


(அனால் தற்காலத்தில், பல மதவாதிகள், தங்களை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பசுத்தோல் போர்த்த புலிகளாக, சொந்த ஆதாயமும்

பெரும் புகழும் தேடுவதுதான் வேதனை தரும் விஷயம். )


என்னைப் பொறுத்தவரை, எம்மதமும் சம்மதமே. என் வீட்டு சாமி அறையில் இயேசு கிறிஸ்து படம் இருக்கிறது. என் மனைவிக்கு 'St.Jude' மிகவும் பிடிதமான தேவாலயம், நான் சில தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும்  சென்றிருக்கிறேன். நமது பிரமாண்டமான இந்துக் கோயில்களைப் போலவே, சில பிரமாண்டமான தேவாலயங்களிலும் மசூதிகளிலும் உள்ளே சென்று பார்க்கும்போது எவருக்கும்  இறை உணர்வு வராமல் இருக்காது. நம் நாட்டில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், இறை நம்பிக்கை குறைந்தது தான் மன நோய்களுக்கும், அதிக குற்றங்களுக்க்ம் காரணம் என்பது எனது கணிப்பு ( கணக்கெடுப்பின் படி, 31% அமெரிக்க கிருஸ்துவர்கள் ஒரு தடவை கூடத் தேவாலயம் சென்றதில்லை; 20% மட்டுமே ஒவ்வொரு வாரமும் செல்கிறார்கள்). அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு. உங்களுக்கு இறை நம்பிகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை; மனித நேயத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்; சகமனிதனை சதி மத வேறுபாடின்றி மனிதனாக மதித்து அன்பு செலுத்தி, உதவுங்கள் அது போதும். ஆனால் நமது நம்பிக்கையை மற்றவர்களின் மீது திணிக்க முயலும் போதுதான் பிரச்சனைகள் உருவாகும்.!!


நம்பிக்கைபற்றிச் சுவாமி விவேகானந்தர்:

எதில் நம்பிக்கை?
• நம்பிக்கை, நம்பிக்கை, நம் மீது நம்பிக்கை, நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை --- இதுவே மகத்துவத்தின் ரகசியம். உங்களின் முப்பது மூன்று கோடி புராணக் கடவுள்கள்மீதும், வெளிநாட்டினர் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திய கடவுள்கள்மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இன்னும் உங்கள்மீது நம்பிக்கை இல்லை என்றால், உங்களுக்கு இரட்சிப்பு இல்லை. உங்கள்மீது நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கையில் நிலைத்து நின்று பலமாக இருங்கள்; அதுதான் நமக்குத் தேவை

சிறுவயதில் நாலாயிர திவ்ப்யபிரபந்தத்தில் பல பாடல்கள் எனக்கு மனப்பாடம். இப்போதும் அவ்வப்போது படிப்பேன். பக்தி இலக்கியம் தமிழுக்குச் செய்த

மாபெரும் தொண்டை யாரால் மறுக்க முடியும்? அவற்றில் உள்ள ஒசை நயம் கற்பனை வளம் இவற்றுக்காவே அவற்றைப் படிக்கலாம்.


அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

- திருவாய்மொழி

இப்பாசுரத்தில் நம்மாழ்வார், கடவுளர்களும், இறைசார் தத்துவங்களும் மதத்துக்கு மதம் வேறுபடுவது போலத் தோன்றினாலும், ஆன்மாவின் இலக்கு என்பது ஒன்றே என்ற ஆழ்ந்த கருத்தைப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே 4 அடிகளில் மிக எளிமையாக அருளியிருக்கிறார்.

மேலும்:


உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்  உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.

ஆழ்வார்கள், விஷ்ணு ஒருவரே தேவன் என்று சொன்னாலும், சில ஆழ்வாளர்கள் சமத்துவத்தை உபதேசிக்கிறார்கள் உதாரணத்துக்கு மேலிருக்கும் பாடல்

முதலாவது, பொறுப்புத் துறப்பு.


சரி, எதற்காக இந்த நீண்ட முன்னுரை? ஏனென்றால் நான் சொல்லப் போவது

இந்துக்களுக்கு மட்டுமே எதிரான கருத்துகளாகத் தெரியும். ஆனால் இது போன்ற
செயல்கள்களை மற்ற மத மக்களும் செய்வது உண்மை (தூண்டப் பட்டோ படாமலோ).
முழுவதும் படித்து, பின்னர் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.




சிந்தனையை மழுங்கடிப்பது தான் அரசியல்வாதிகளின் நோக்கம்.
முக்கியமான பிரச்சனைகள் எழும்போது வேறு தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். சரித்திர உண்மைகள் மாற்றி, மறைக்கப் படுகின்றன. நேரமில்லாத பரபரப்பு வாழ்க்கையில் சுடு சோற்றை அள்ளி விழுங்குவது போல் அரைவேக்காட்டு உண்மைகளை விழுங்கி ஜீரணித்து அதற்கேற்பச் செயல்படுகிறார்கள் மக்கள் . (சச்சி பதிவிட்ட செம்மறியாடு மந்தைக் கதை ஒரு நல்ல உதாரணம்).

மணிப்பூர் சம்பவம் என்ன ஆச்சு ? எல்லோரும் மறந்துவிட்டர்கள் போல. ஏன்? அது உங்களுக்கே தெரியும்!! என்னா அத விட முக்கியமான வாழ்வா சாவா என்கிற பிரச்சன எல்லாம் இருக்கு இல்ல? அதப்பத்தி, இதோ நம்ம கோயம்புத்தூர் குசும்பன் என்ன சொல்றாருன்னு பாக்கலாம்:


ஆமா, தெரியாமத்தான் கேக்குறனுங்க: எத்தனை ஆயிரம் மதுக் கடைகளுக்கு

கடவுள் பேர் இருக்குதுங்க? - அது கெடக்கட்டும்! (சில மாநிலங்களில் தடை இருக்கிறதாம்
மாமிச உணவு பரிமாறப்படும் லட்சக்கணக்கான உணவகங்களில் கடவுள் படங்கள் இல்லையா? - அது கெடக்கட்டும்! (அவுங்க பாத்தா நமக்கு என்ன?)


படங்கள், சீரியல்களில் கடவுள் வேடமிடும் நடிகர் நடிகைகள் அனைவரும் சாகச பட்சினிகளா? - அது கெடக்கட்டும்! (அவுங்க தின்னாலும் திங்காட்டியும் நமக்கு என்ன போச்சு?)

அட! வங்காள பிராம்மணர்கள், இந்துக்கள் மீன் சாப்பிடுறாங்களே - அது கெடக்கட்டும்! (அவுங்களுக்கு வேற வழி இல்லையாம்!)


(எனக்குத் தெரிந்து, தெற்கில் வாழும் பல பிராம்மணக் குடும்பங்களில் பிள்ளைகளாவது மாமிசம் சாப்பிடுவது உண்மை!)- அது கெடக்கட்டும்,, அவங்களத்தான் நாடு கடத்தியாச்சே !!


அனா..அதுல பாருங்க,, தப்பித்தவறிக் கூடச் சினிமால ஒரு சீன்ல கூட 'ராமர் கூட மாமிசம் சாப்பிட்டது உண்மை' அப்படின்னு சொல்லிடக் கூடாதுங்க ..என்ன ஒரு அபச்சாரம் !! இத விட நாட்ல இப்ப முக்கியமான பிரச்சனை எதுவுமே இல்லீங்க!! (அந்தப் புள்ள என்னங்க பண்ணுச்சு ? நடிக்கச் சொன்னாங்க, நடிச்சுது!!). அதானுங்க நா சொல்லுறது !! ஆனா பலபேரு,


"கெடக்கறது கெடக்கட்டும் நயன்தாரவத் தூக்கிக் கூண்டுல வெய்யி!!” அப்படின்னு கத்துராங்க.

ராமர் கறி சாப்புட்டாரா இல்லியா.. இது தான் இப்ப தலைபோற பிரச்சனையாமா.!

அத எல்லாம் நீங்க ஆராய்ச்சி பண்ணப் போனா, தல சுத்துறது தான் மிச்சம். ராமாயணத்துல இருக்குங்கறாங்க இல்லங்குறாங்க. சில பேரு இல்லவே இல்லன்னு சத்தியம் பண்றானுங்க என்னமோ இவனுக பக்கத்துல இருந்து பாத்த மாதிரி (ராமரு வாழ்ந்தது 8.8 லட்சம் வருஷம் முன்னாலயாம்!!) . ராமாயனத்துக்கே நாலு பேரு நாலு விதமாவிளக்கம் சொல்லுறப்ப யாருமே எதுத்துக் கேள்வி கேக்கக் கூடாதுன்னு சொல்றது எப்படி நியாயம் ஆகும்?
பேச்சு சுதந்திரமே இல்லியா?


ஆக மொத்தம் ராமரு நான்-வெஜ் சாப்புட்டாரா இல்லியான்னு யாருமே தெளிவாச் சொல்ல முடியாது. ஆனா, ஒண்ணு தெரியுமுங்களா? மனு ஸ்மிருதில (அதுதாங்க இப்ப எல்லாம் பள்ளிக் கூடத்துல கூடச் சொல்லிக் குடுங்கன்னு தூக்கிப் புடிச்சி கொண்டாடுராங்களே - அந்தப் பொத்தகம் தானுங்க !!) அதுல கூட எப்ப எப்ப எல்லாம் பிராம்ணர்கள் மாமிசம் சாப்புடலாம்னு

இருக்குதாம் .. அத பத்தி எழுதுனா ரெண்டு பக்கம் வரும்.. வேணும்னா 'கோரா' இல்லாட்டி கூகுள்ள தேடிப் பாருங்க

சாம்பிளுக்கு : Manu 5:32. He who eats meat, when he honours the gods and Ancestors, commits no sin, whether he has bought it, or himself has killed (the animal), or has received it as a present from others.

அப்டின்னா, இனிமே எல்லா ஹிந்துக்களும் மாமிசம் சாப்புடலாம்னு சொஓல் போறங்களா என்ன? அது நடக்காது. நீங்க தப்பா மொழிபெயர்ப்பு செஞ்சீங்க அப்படிம்பாங்க. .


எனுங்க சுவாமி விவேகாநந்தருக்கு மேல இந்துக்களப் பத்தி யாருக்குத் தெரியுமுங்க? அவரு சொன்னா நான் கேப்பேனுங்க. நீங்களும் கேப்பீங்க இல்ல? எதோ இங்கிலீசூல சொல்றாரு; புரியுதான்னு பாருங்க :
That’s a question which no modern Hindu wants to look back upon today. But Swami Vivekananda, a person who never hesitated to see the History as it was, does say that the Hindus took beef in the past.  Let me quote some instances where he has said that.

“You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it. ” ( Complete Works Volume 3. Buddhistic India)

Again,

“There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin; you read in the Vedas how, when a Sannyasin, a king, or a great man came into a house, the best bullock was killed; how in time it was found that as we were an agricultural race, killing the best bulls meant annihilation of the race. Therefore the practice was stopped, and a voice was raised against the killing of cows. Sometimes we find existing then what we now consider the most horrible customs.“(Complete Works Volume 3. Reply to the Address at Madura)


காலைல எந்திரிச்சு காபி சாப்புட்டமா, நிம்மதியா நூஸ் படிச்சமன்னு இருக்க முடியுதுங்களா? அவரு இப்படி சொல்லிப் போட்டாரு இவரு எதுத்தாரு.. இதேதானுங்க. மெத்தப் படிச்சவங்களை விட இந்த அரைகுறை மேதாவிங்க பண்ற அளும்பு தாங்க முடியல. அவங்க எதையாவது சொல்லப் போயி, "மருமக கைப்பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்"னு சொல்ற மாதிரி எது சொன்னாலும் கொடியத் தூக்கிட்டு வந்துடரானுக (எல்லாக் கட்சிகாரனுங்க, மத ஆளுங்க்களும் தான் ) ஒரே ரோதன தானுங்க. என்ன நான் சொல்றது சரிதானுங்களே?

ஹூம்!! நாம என்னத்தச் சொல்லி என்ன ஆவப் போகுதுங்க ? நாம நம்ம பொளப்பப் பாக்கலாம்..

எழுதியவர் : (19-Jan-24, 6:03 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 164

மேலே