கொல்லுயிராய் மாறிய மனிதன்
எழுபுரவி ரதமேறி இரவியவன்
எழுகடலின் நீர்கொண்டு மேகமது
எழச்செய்து உலகதனில் பெருமழையை
விழச்செய்ய தாவரமும் விலங்குகளும்
பல்லுயிரும் தழைத்திங்கு வாழ்ந்திடவே
புல்லுருயிராய் வந்துதித்த மனிதனவன்
பல்லுயிரும் பசுங்காடும் அழித்திங்கு
கொல்லுயிராய் மாறியதும் கொடுமையன்றோ.
இதில் 1, 4 சீர்களில்எதுகை இருக்க, எல்லாச் சொற்களும் காய்ச்சீர்களாக இருப்பதால் இது அறுசீர் ஆசிரிய விருத்தம் என்பது என் கணிப்பு. பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.