இரவெல்லாம்

உன் சின்னச் சின்னத் தீண்டல்களில்
என் தூக்கம் கலைக்கிறாய்!
நித்தமும் என் நித்திரை தொலைக்கச் செய்கிறாய்,
உன்னை அலட்சியம் செய்தாலும் ,
பற்கள் பதித்தே என்னைப்
புரட்டிப் போடுகிறாய் !
என் காதோரத்தில் வந்து கதை பேசுகிறாய் !
விடியும் வரை தொல்லை செய்து
விடிந்த பின்பே என்னை உறங்கச் செய்கிறாய் !
--இரவெல்லாம்... கொசு !

எழுதியவர் : Radha (22-Jan-24, 8:12 pm)
சேர்த்தது : ராதா
Tanglish : iravellaam
பார்வை : 174

மேலே