குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.
அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;
அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு
முன்னிலை யாக்கல்.
மெய்தொட்டுப் பயிறல்.
பொய் பாராட்டல் (9, 10)
இடம்பெற்றுத் தழால்.
வழிபாடு மறுத்தல்.
இடையூறு கிளத்தல்.
நீடுநினைந் திரங்கல்.
மறுத்தெதிர் கோடல் (15, 16)
வறிது நகைதோன்றல்.
முறுவற் குறிப்புணர்தல்.
முயங்குதல் உறுத்தல்.(19, 20)
புணர்ச்சியின் மகிழ்தல்.
புகழ்தல்.
(இ-ள்) தலைவியினது நலத்தைத் தலைவன்வியந்து பாராட்டல்.
கட்டளைக் கலித்துறை
ஒருகால் விரிதந் தொருகாற் குவிதரு மொண்க(ஞ்)சமு
மிருகாலும் வந்துதி யாமதி யாவது மீரருகும்
பொருகா விரித்துறைத் தஞ்சைக் குலோத்துங்கன் பூங்கிரிவாய்
வருகா ரிகைநின் முகம்போலு மென்பதெவ் வாசகமே! 22
இப்பதினைந்து துறைகளுள், இரந்து பின்னிற்றற்கு எண்ணல் முதல் நீடுநினைந்து இரங்கல் ஈறாகிய ஒன்பதினுள், வழிபாடு மறுத்தல் ஒழிந்த எட்டும் வேட்கை யுணர்த்தற்கும், வழிபாடு மறுத்தலொன்று மறுத்தற்கும், மறுத்தெதிர் கோடலும் வறிதுநகை தோற்றலும் ஆகிய இரண்டும் உடன்படற்கும், ஏனைய நான்குங் கூட்டத்திற்கும் உரியன.
2 - இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று.