குடியரசு தின சிறப்பு கவிதை

#குடியரசு தினம் சிறப்பு கவிதை...

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

டாக்டர் அம்பேத்கர்
தலைமையில் எழுதப்பட்ட
சட்டப் புத்தகம்
வெளியீட்டு தினத்தையே!
குடியரசு நாளாகக்
கொண்டாடப்படுகிறது.....

உலகிலேயே !
சட்ட புத்தகச் சிகரங்களில்
இந்தியாவின்
சட்ட புத்தகம் தான்
எவரெஸ்ட் சிகரம்.....

சட்டம்
தன் கடமையை
தவறாமல் செய்யும்
லஞ்சம் கொடுக்க விட்டால்....

அரசியல்வாதிகளின்
செல்லப்பிராணிகள்
என் நாட்டு சட்டங்கள்....

காவலர்கள்
சிறையில் வைத்து
பூட்டி இருப்பது
சட்டங்களைத்தான்....

நீதி தேவதையின்
கண்களை
கருப்பு துணியால் மட்டுமல்ல....
காதுகளை
கருப்பு பணத்தாலும்
அடைக்கப்பட்டு இருக்கிறது....

மக்களைப் பாதுகாக்க
கொடுக்கப்பட்டக் கத்தியை
இவர்கள்
மக்களை மிரட்டுவதற்கே
பயன்படுத்துகின்றனர்...!!!

சட்டங்களைக் கண்டு
பயப்படுகின்றவர்களை விட
சட்டங்களையே! பயப்படுத்துகின்றவர்கள் தான்
என் நாட்டில் மிகுதி...

லஞ்சக் கரையான்கள்
சட்டப் புத்தகத்தை
அரித்துக் கொண்டே வருகிறது....!!

பணக்காரர்கள்
சட்ட புத்தகத்திற்கே
இன்னொரு சட்ட புத்தகமாக இருக்கிறார்கள்....

சட்டங்கள்
தூக்கில் போட்டவர்களை விட சட்டங்களையே
தூக்கில் போட்டவர்கள் தான்
இங்கு அதிகம்.....

நீதிமன்றங்களின்
வாசல் படியை
மிதிப்பதே இல்லை
என் நாட்டுச் சட்டங்கள்....

என்று சட்டங்கள்
சட்ட புத்தகத்தைத் தாணடி
சராசரி மனிதன்
வீட்டு வசலுக்கு வருகிறதோ!
அன்றே !
உண்மையான குடியரசு தினம்...!!!

♥குடியரசு தின நல்வாழ்த்துகள்♥

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (26-Jan-24, 5:55 pm)
பார்வை : 16

மேலே