மனையா ளுன்னைப் பேணுவேன் கண்ணைப் போலே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையைக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

ஒருமுறை பார்த்தால் போதும்
..உன்னுரு வம்,நீங் காது;
திருமுகங் காட்டு வாயே
..தென்றலாய் மூச்சு தன்னில்
கரிசனங் கொண்டு நானுங்
..காண்கிறேன் துணையா யெண்ணி;
பிரியமாம் மனையா ளுன்னைப்
..பேணுவேன் கண்ணைப் போலே!

- வ.க.கன்னியப்பன்

1959 ல் வெளிவந்த பாடல்

‘ஒருமுறை பார்த்தாலே போதும்
உன்னுருவம் என் மனசை விட்டு நீங்காது எப்போதும்’ என்ற பாடலின் தாக்கம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-24, 8:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே