ஏழையின் சிரிப்பினிலே இறைவனைக் காணுங்கள்

சிறுமையில் வறுமையே
கொடுமையிலும் கொடுமையே//1
அகத்தினில் வஞ்சமின்றி
அகல்விளக்காய் ஒளிவீசும்//2
ஆசைகள் இருந்தாலும்
ஆயிரம் தொல்லைகள்//3
ஏழையாய் பிறப்பில்லை
இடைவந்த இடர்களே//4
ஏழையும் ஓர்நாள்
உலகத்தின் நாயகன் //5
மனிதம் நிலைத்திடில்
மனிதரே யாவருமென்று //6
எண்ணியே வாழ்ந்திடில்
எல்லோரும் சமத்துவம்//7
பணம் படைத்தவன்
பணக்காரன் என்றாலும்//8
பண்புள்ள ஏழையே
பாசத்தின் இருப்பிடம்//9
ஏழையின் சிரிப்பினிலே
இறைவனைக் காணுங்கள்//10
கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (23-Feb-24, 1:33 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 27

மேலே