பலாப்பிசின்கள்

பலாப்பிசின்கள்
01 / 03 /2024

ரோஜா புதர்கள் முட்கள் கொண்டதென்று
புகார் செய்வதா? இல்லை
முட்புதற்குள் ரோஜாகள் மலர்ந்ததென்று
கொண்டடாடுவதா?
வாழ்வெல்லாம் வேதனை தொடர்கின்றதென்று
வாடுவதா? இல்லை
வேதனையிலும் வாழ்வில் மகிழ்வென்று
பாடுவதா?
வேதனையும் சோதனையும் வாழ்வின்
இருபக்கங்கள் - அதுபோல்
கண்ணீரும் புன்னகையும் நாணயத்தின்
இருமுகங்கள்
ஒன்றில்லாமல் மற்றது இல்லை
ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள்.
பிரிக்க முடியாத பலாப்பிசின்கள்
பிரித்தாலும் ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணிகள்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (1-Mar-24, 6:21 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 30

மேலே