வாழ்க்கை

புரியாத புதிர்
நடுத்தர வயதில்
எல்லாம் புரிந்தது
பாலபருவத்தில்
புரிந்தும் புரியாமலும்
புரியாமலும் புரிந்தும்
முடிவை எதிர்நோக்கையில்
விரும்பியவர்களுக்குக் கனா
வெறுப்பவர்களுக்கு வினா
திட்டுபவர்களுக்குத் திகில்
தினம் ரசிப்பவர்களுக்குச் சுகமான துயில்
சலிப்பவர்களுக்குச் சாதாரணம்
மதிப்பவர்களுக்கு மா தவம்
சீரிய நோக்குடையோருக்கு நெடும் பயணம்
சிந்தனை அற்றவர்களுக்கு பேருந்துப் பயணம்
கொடையாளர்களுக்கு வாய்ப்பு
படைப்பாளர்களுக்கு ஈர்ப்பு
அரசியல்வாதிகளுக்கு அதிகாரம்
ஆன்மிகவாதிகளுக்குப் பரிகாரம்
மொத்தத்தில்
நிறமற்ற மணமற்ற சுவையற்ற
அனைவரும் பருகியே ஆகவேண்டிய பானம்
வாழ்க்கை!!!

எழுதியவர் : கலைவாணி (2-Mar-24, 6:31 pm)
சேர்த்தது : Vigneshwari
Tanglish : vaazhkkai
பார்வை : 96

மேலே