உலக மகிழ்ச்சி தினம் 20 03 2024
நாம் எதற்காக இந்த அழகிய இயற்கை எழில் கொஞ்சும் உலகில் பிறந்திருக்கிறோம்?
தினமும் மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு தூங்கவா?
மனதில் நிறைந்தவரை நிறைய காதலித்து விட்டு பின்னர் ஏங்கவா?
அவசியமோ இல்லையோ, வாய் ஓயாமல் நாம் பேசி பிறர் ஓயவா?
ஏதாவது ஒரு விதத்தில் நிறைய பணம் சேர்த்து , சோர்ந்து பண பாரத்தை சுமக்கவா?
நேரத்தைக் கொல்ல, வாரத்தில் எட்டு திரைப்படங்களை பார்த்து விட்டு விழிக்கவா?
சுடாது மழை பெய்தாலும் நனையாமல் வெயில் அடித்தாலும், விடாது டிவி நாடகங்களை வேர்த்தாவது பார்த்து தவிக்கவா?
ஒரு மனிதன் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ தேடும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?
மகிழ்ச்சி. என்றும் மகிழ்ச்சி. Be Happy..எப்போதும் மகிழ்ச்சி.
சறுக்கு மரம் ஏறினாலும் மகிழ்ச்சி ! சறுக்கி விழுந்தாலும் மகிழ்ச்சி!
நேர்வழி சென்றாலும் மகிழ்ச்சி, குறுக்கு கிறுக்கு வழி நடந்தாலும் மகிழ்ச்சி !
இன்று உலக மகிழ்ச்சி தினம்!
எனவே இன்று மகிழ்ச்சியுடன் இருப்போமே ஒரு கணம்!
பணம் உள்ளவரை கண்டு கொள்வதில்லையே குணம்!
குணம் உள்ளவரை அண்ட விடுவதில்லையே பணம்!
பணமோ குணமோ, நமக்கு அன்றாடம் தேவை மகிழ்ச்சி!
கோயம்பேடு, கொத்தவால் சாவடி, பாரிமுனை இல்லாட்டி ரங்கநாதன் தெரு, ஏதாவது ஒரு இடத்தில இந்த மகிழ்ச்சியை பிடிச்சிப் போட்டுக்க வேண்டியது தான்!
உலக மகிழ்ச்சி தின நல்வாழ்த்துக்கள்!
ஜாய்ராம்
பின் குறிப்பு:
ஆமாம், மகிழ்ச்சி மகிழ்ச்சின்னு அப்பப்போ புலம்பறாங்களே, மகிழ்ச்சின்னா என்னங்க???