வள்ளுவத்தை படித்திடுவோம் வாழ்வினை வளமாக்கிடுவோம்

வள்ளுவத்தை படித்திடுவோம் வாழ்வினை வளமாக்கிடுவோம்.


குமரியில் வள்ளுவன் காலடியில் உதயமாகும்/
கதிரவனாக உலகுக்கு ஓளி தருவதாக /

இருள் நீக்கி இன்பம் பயக்கும்/
மருள் நீக்கி மாசறு நல்கும் /

அறவழி தந்திடும் அந்தந்த துறைக்கு/
அல்லவை தேய் அறம் பெருகும்/

தடுமாறி நிற்கும் கப்பலுக்கு வழிகாட்டிடும் /
கலங்கரை விளக்காக மனிதனுக்கு வழிகாட்டிடும்/

அரிய தத்துவங்களை ஆழமான சிந்தனைகளை /
சுருங்க சொல்லி கடலளவு வழிகாட்டிடும்/

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (6-Apr-24, 6:59 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 177

மேலே