நெருப்பு
நெருப்பு
**********
சாதகம்
+++++++
உண்டிடும் உணவை
உகந்ததாக சமைத்து/
கண்டிடும் பார்வைக்கு
காரிருளை ஒளியாக்குமே/
உருவில்லா உலோகத்தை
உருக்கி உருதந்து/
உருவுற்ற மண்ணும்
உயிர்தரும் சிலையாகுமே/
அணையா விளக்கெரியும்
அணலாகும் மின்சாரத்தாலே/
பாதகம்
--------------
உரசும் மரத்தால்
உயிராகும் தீயும்/
வரமான இயற்கையை
வாரிச்சுருட்டி உரமாக்குமே/
கடன்பட்டார் மேனியை
கரிக்கட்டையாக மாற்றியே/
உடன்கட்டை ஏறுவோர்
உடலை எரித்திடுமே/
புகையாகும் நெருப்பும்
பகையாகும் உயிர்க்கே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்