நீ யார் ?

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

*நீ யார்....?*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

நீ புத்தனாகலாம்
போதி மரம்
தேவையில்லை....

நீ துறவியாகலாம்
எதையும் துறக்க
வேண்டியதில்லை.....

நீ ஞானியாகலாம்
எதையும்
நஷ்டப்படத்தேவையில்லை....

அதற்கு
ஒரு வழி இருக்கிறது....
*நீ யார்?* என்று
உன்னை நோக்கி
நீயே! கேட்பதுதான்...

இப்போது கேள்
நீ யார்....?

"பெயர்" தான்
நீ என்றால்
நீ எழுத்துக்களால்
ஆனவனா.....?

"தொலைபேசி" எண் தான்
நீ என்றால்
நீ எண்களால் ஆனவனா ...?

"ஆதார் அட்டை" தான்
நீ என்றால்
எண் எழுத்து
இரண்டாலும் ஆனவனா...?

"போட்டோ" தான்
நீ என்றால்
நீ நிழலால் ஆனவனா...?

"உடல்" தான்
நீ என்றால்
வெறும் செல்கள் தான்
உன் கட்டமைப்பா...?

இது கூட
நான் சொன்னது தான்
இதோ ! பலர்
சொல்கின்றனர்
கேளுங்கள்....

நான் பணக்காரன்...
நான் படித்தவன்...
நான் உயர்ந்த சாதிக்காரன்...
நான் அரசியல்வாதி...
நான் அதிகாரி...
இன்னும் இன்னும்
சொல்கின்றார்கள்.....

எதுவாயினும்
"உண்மை" என்று
ஒன்று உள்ளது
அல்லவா....?

நீ யார்
என்ற கேள்விக்கு
உண்மை
சொல்லும் பதில்....
"*மண்* அல்லது
*சாம்பல்......!!!"*

_கவிதை ரசிகன்_

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Apr-24, 8:39 pm)
பார்வை : 45

மேலே