விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 பாகம் 11
விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 : பாகம் 11
++++++++++++++++++++++++++++++++++
ஜாதகத்தில் செவ்வாய் சுக ஸ்தானமான நான்காவது இடத்திலும், சூரியன் ஐந்தாவது இடத்திலும் இல்லாதிருக்க...
கட்டியவள் உடனிருக்க பஞ்சனையில் படுப்பினும்
காளையான இளசுக்கு தூக்கமும் உண்டோ
கட்டிடமே கட்டிடமாக இல்லாதிருக்க -அக்
கட்டிடத்தில் அட்டையில் படுத்திட தூக்கமேது
நாட்டொன்ற ஓட்டுக்கூரை வேய்ந்தே
நாற்புரம் சிதைந்து இன்று விழுமோ
நாளை விழுமோயென்றக் கட்டிடத்தில்-உட்புறம்
நாற்புரமும் மதுநிறைந்த அட்டைப்பெட்டி
நடுவில் சிறிய இடத்தில் அடைகாக்கும்
நாட்டுக்கோழியாக சுருண்டே அட்டையை விரித்தே
நாடிழந்த அகதியைப் போல் படுத்திருக்க
நடுநாழிகையில் தான் தூக்கமே -அவ்வேளையும்
அரைப்போதையில் திரிகின்ற குடிகாரக் கும்பல்
அறைக்கதவை தட்டியே ஏய்..பாய் எழுந்திரு
அரைக்கோட்டர் வேனும் என்பான்..
அசைவின்றி படுத்தே சமாளிக்க
அரைக் கூவைகள் சென்று விடும்
அவர்களுடன் எங்களது
அன்றைய தூக்கமும் சென்று விடும்
வாழ்க்கை வாழத்தான்-ஆனால்
வலிகள்தான் எத்தனை....
வீராணக் குழாயில் படுத்து
வீழ்ந்து கிடக்கும் உறவுகளின்
வலியை விட எனது
வலி சிறியதுதான்...
ஈஸ்வரன் விளையாட்டு தொடரும்....