முன்னேறிவிடு…
முன்னேறிவிடு….!
21 / 04 / 2024
வாழ்க்கையை அனுபவிப்பவனைப் பார்த்து ஏங்காதே
வாழ்க்கையை வெல்லும்வரை நீயும் தூங்காதே
கீழே உள்ளவரை கண்டு நாளும் எள்ளாதே
மேலே வரும்வரை உழைப்பை தள்ளாதே
பழையதை சேர்த்து வைத்து கலங்காதே
நினைவுகளை தேக்கி வைத்து குழம்பாதே
கவலைகளை கண்ணில் வைத்து கரையாதே
கனவுகளை நெஞ்சில் வைத்து தடுமாறாதே
பொய்யையும் புரட்டையும் வாழ்வில் தொடராதே
உண்மையையும் உழைப்பையையும் என்றும் கைவிடாதே
புதிதாய் புதிதாய் நீயும் பிறந்துவிடு
புதிதாய் நாளும் நினைத்து முன்னேறிவிடு