காயமே இது பொய்யடா

காயமே இது பொய்யடா

மாயனாகிய ஈசன் மண்ணைப் பிசைந்து/
மண்பாண்டத்தின் உருவமாக காற்றாடித்தப் பையான/
உடல் அழிந்து கலன் உடைந்து /
உபயோகமற்ற ஓடுகள் போன்று மிஞ்சும்/

நிரந்தரமற்ற சரீரம் கொண்ட மனிதனே /
நிலை மாறும் பணத்துக்காகப் பாதகம்/
செய்வதும் பொய்யும் புரட்டும் ஏனடா/
சிறப்பாக வாழ்ந்திட நற்குணமே போதுமடா/

சில விநாடிகள் சுகத்தினை கண்டிட /
சிறார்களை சீரழித்து வீசுவாதும் ஏனடா/
மெய்யற்ற மேனியில் உள்ள வாயால் /
பொய்யான வார்த்தைகள் நாவினால் உரைப்பதேனடா /

மேனி அழிந்து மண்ணில் கலந்திடும்/ மனிதனுக்கு சேமிப்பில் பணமும் ஏனடா/
தான் அழிந்து தானம் கொடுத்திடு/
தரணி உள்ளவரை பெயர் நிலைத்திருக்கும் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (24-Apr-24, 3:39 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 35

மேலே