சோணல் கோணல்
முதல் மகப்பேறு. இரட்டை குழந்தைகள்.
பெண் குழந்தைகள். மணமாகி ஐந்து
ஆண்டுகள் கழித்துப் பிறந்த குழந்தைகள்.
அந்த ஊர் வழக்கப்படி அந்த ஊரில்
வயதில் மூத்த பாட்டி தான் சோதிடரின்
ஆலோசனையைப் பெற்று
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது
வழக்கம். இன்று பெயர் சூட்டு விழா
ஊர் பொது மண்டபத்தில்.
நூறு வயதான பாட்டி சுப்பாத்தா:
சோசியரே இரட்டைக் குழந்தைகள்.
இரண்டும் பெண் குழந்தைகள். கடந்த
தொண்ணூறு ஆண்டுகளாக நம்ம
ஊரில் குழந்தைகளுக்குத் தமிழ்ப்
பெயர்களை வைப்பதில்லை என்பதை
நாம் எல்லோரும் அறிவோம். இந்திப்
பேருங்களைக் குழந்தைகளுக்கு
வைக்கிறது தான் நம்ம தமிழ்க் கலாச்சாரம்.
அதன்படி ஒரு குழந்தைக்குப் புதுமையான
இந்திப் பேரைச் சொல்லுங்கள். அதைக்
குழந்தையின் பெற்றோர் குழந்தையின்
காதில் மூன்று முறை மெதுவாகச்
சொல்லி குழந்தைக்கு முத்தமிடுவார்கள்.
இப்ப பேரைச் சொல்லுங்கள்
சோதிடர்: சோணல்.
(உடனே குழந்தையின் பெற்றோர்
குழந்தையின் காதில் "சோணல், சோணல்,
சோணல்" என்று மூன்று முறை
மென்மையாகக் கூறி குழந்தையை
முத்தமிடுகிறார்கள்)
@@@@
சரி. ஒரு குழந்தைக்கு அருமையான
இந்திப் பெயர் 'சோணல்' சுவீட்டு நேமு.
இரண்டாவது குழந்தைக்கு வயதில்
மூத்தவளான நான் வைக்கும் பெயர்
'சோணல்'க்குப் பொருத்தமா 'கோணல்'னு
பேரு வைக்கிறேன்.
(குழந்தையின் பெற்றோர் குழந்தையின்
காதில் மூன்று முறை 'கோணல், கோணல்,
கோணல்' மெதுவாகக் கூறி குழந்தையை
முத்தமிடுகிறார்கள். தாய் மாமா
குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியை
அணிந்து விடுகிறார்)
@@@@@@
பெயர் சூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அனைவரும் விருந்துண்ணச் செல்லும்படி
கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
@@@@@@@@£££££££££££££££££££££££££££
Sonal = Golden. Feminine name.