சிண்டு

உங்க பையன் பேரு என்னங்க?@@@@@@


எங்க பையன் பேரு 'சிண்டு'.@@@@@@

என்னங்க போயும் போயும் உங்க

பையனுக்கு 'சிண்டு'னு பேரு

வச்சிருக்கிறக்கறீங்களே, இந்தப் பேரைக்

கேக்கறவங்க என்ன நினைப்பாங்க?


@@@@@@

என்னமோ நினைச்சிட்டுப் போகட்டும்

எனக்கு என்னைய்யா நட்டம்? எங்க

பையன். அவனுக்கு இந்திப் பேரு மாதிரி

உள்ள பேரை நாங்க வச்சிருக்கிறோம். வட

மாநிலங்களில் 'சிண்டே' (ஷிண்டே)னு

பேரு வச்சுக்கிறாங்க. அவுங்களைப்


போயி ஏன் அந்தப் பேரை

வச்சிருக்கிறீங்கனு யாராவது

கேட்டீங்களா? போ ஐயா உன்ற வேலையை

ப் பார்த்துட்டு. நாங்க 'சிண்டு'னும் பேரு

வைப்போம்; 'மண்டு'னும் பேரு வைப்போம்.

நாங்கள் பச்சைத் தமிழர்கள் ஐயா.

தமிழ்ப் பேருங்களைப் பெத்த

பிள்ளைகளுக்கு வைக்காதவங்க தான்

உண்மையான தமிழர்கள் என்பது

எங்களுக்கும் தெரியும் ஐயா. என்னையப் போயி எம் பையனுக்கு ஏன் 'சிண்டு'னு பேரு வச்சீீீீீங்ங்கனு கேக்கறீீீீங்க. உங்க பையன் பேரு என்னன்னு நான் கேட்டேனா?

எழுதியவர் : மலர் (8-Jun-24, 9:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

மேலே