காதலி என்னை ஆதரி

"உன்னாலே நான் வாழ்கிறேன்
என் ஜீவன் உன்னோடு வருமா வரமா என்று கேட்கிறேன்
காதலே என்னைக் காதலி !!
காதலி என்னை ஆதரி !!
உன் அணைப்பிலே என் ஆயுள் கூடுமடி
உன் அழைப்பிலே எனக்கு சுகங்கள் வேணுமடி
உன் காதோரமாய் காதோரமாய் என் சுவாசக் காற்றை அள்ளி வீசவே
உன் மௌனம் கலைந்து போக போக....
காதலே என்னைக் காதலி !!
காதலி என்னை ஆதரி !!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (9-Jul-24, 3:39 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 133

மேலே