அப்பா- வாக்கியத்தில் முடியும் கதை
அப்பா- வாக்கியத்தில் முடியும் கதை
அப்பாவின் வலதுபுறமாய் கையை கட்டிக்கொண்டு நின்று அவர் முகத்தை பார்க்கிறேன், புன்னகைப்பது போல இருந்தபடி இருந்ததை பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது, இந்நேரத்துக்கு “தாம் தூம்” என்று குதித்திருக்க வேண்டும், “எனக்கு ஏசி ஆகாதுன்னு தெரியாதா? என்று எங்களை கண்டபடி பேசியிருக்க வேண்டும். ஆனால் ஏன் இப்படி சுகமாய் படுத்துகொண்டு இந்த ஏசி வசதியை அனுபவித்து இரசிப்பது போல…!
யாரோ தோளை தொடுவது போல உணர்வு, திரும்பி பார்க்க, “டைமாச்சு பாக்சை வேன்ல ஏத்திடலாம்" அங்க போய் சேர சரியாயிருக்கும், சொல்லி கொண்டு போனார்கள்.