ஒரு பெயருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு
நமது பகுதியின் இளைஞர் திலகங்களே!
தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றும்
பெரும்பாலான பெண்
கதாப்பாத்திரங்களின் பெயர் 'மாயா'. வேற
பெயர்களை அந்தக் கதாபாத்திரங்களுக்கு
வைக்கத் தெரியாத தடுமாற்றத்தில்
சின்னத் உள்ளது. எனவே 'மாயா' போன்ற
மாற்றுப் பெயர்களை உருவாக்கும்
போட்டியில் கலந்துகொள்ள
வந்துள்ளீர்கள்.
என் முன்னே உள்ள மேசையின்
இரண்டிரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள்
கட்டப்பட்ட பணம் பத்தாயிரம் உள்ளது.
மாயாவிற்கு இணையான பெயர் ஒன்றைச்
சொல்லிவிட்டு ஆயிரம் ரூபாயை எடுத்துக்
கொள்ளலாம். போட்டி துவங்குகிறது:
'மாயா'
',ஆயா'
ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்.
'காயா'.
இதோ உன் ஆயிரம் ரூபாய்.
'தாயா'.
இதோ உன் பரிசு. எடுத்துக்கொள்.
'பாயா'
ஆயிரம் அழகாக உனக்காக.
'ஈயா'
ஆயிரம் உனக்கே.
ஊயா'
ஆயிரம் உனது உரிமைத் தொகை.
'ஏயா'
பரிசு பணத்தை எடுத்துக்கொள் தம்பி.
'நாயா'.
ஆயிரம் உனதாகட்டும் தோழரே.
'ஞாயா'
இதோ ஆயிரம்.
'ஓயா'
இது பத்தாவது பரிசுத் தொகை.
எடுத்துக்கொள் தோழி.
@@@@###@@@@@@@@@@@@@@@@@@@
இது போன்ற போட்டிகள் வாரம் ஒருமுறை
நடத்தி தொலைக்காட்சித் தொடர்களில்
பெயர் பஞ்சத்தைத் தவிர்ப்போம்.