ஆண்டாள் கண்டாள், மீரா கொண்டாள்

கண்ணன் என்னும் பெயரில் கடவுளையே கண்டாள்
கண்ணன் தான் தன் வாழ்க்கையே என்ற ஆண்டாள்!
வட இந்தியாவில் வாழ்ந்தாள் அரிய பக்தை மீராபாய்
மாயக்கண்ணனிடம் மீரா இருந்தாள் வெகு அன்பாய்!
பெண் குலத்திற்கு சுடர்விளக்காகத் திகழ்ந்தாள் சீதை
மானிட வர்க்கத்திற்கே தீபமாய் ஒளிவிடுகிறது கீதை!
ஆண்டாள், கண்ணனே தன் பதி கதி எனக்கொண்டாள்
மீரா பாய் கிருஷ்ணனே முக்திக்கு வழி எனக்கண்டாள்!
பிரபஞ்ச சக்தி விழிகளுக்கும் மனதிற்கும் புலனாகாது
இச்சக்தியின்றி எந்த உலகமும் உயிர்களும் இயங்காது!
பேராற்றல் வாய்ந்த இச்சக்திதான் முழுமையான அறிவு
அவ்வறிவே எதிலும் இறையாய் உளது என்பதை உணரு!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jul-24, 12:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 39

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே