சூடான ஒரு கோப்பை தேநீர் காத்திருக்கிறது

சூடான ஒரு கோப்பை தேநீர் காத்திருக்கிறது
கண்ணை பறிக்கும்
நிறம்
இடை சிறுத்து
வளர்ந்த
விரிந்த வாயில்கள்
தொட்டு நிற்கும்
தேநீர்
இடுப்பில் கை
போட்டு
காத்திருக்கிறது

இடுப்பில் வைத்த
கையோடு கை
சேர்த்து
முகத்தோடு
முகம் வைத்து
முத்தமிட்டு
பருகப்போவது
இளம் உதடுகளா?
(என்னை போன்று)
கிழம்
உதடுகளா?

ஏக்க பெருமூச்சை
ஆகாயத்தில்
புகையாய்
வெளியிட்ட வண்ணம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Sep-24, 8:44 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 36

மேலே