கடற்கரை தனிமையில்

தொடர் கதையாக
தொடர்ந்த துக்கம்,
உறக்கம் விலகித்
தவித்த நான்....

அன்னையை இழந்த
நான், அன்னை
மடிதேடி தனிமையில்
கடற் கரையில்....

ஆழ்மனதின் அயர்ச்சி
நீக்க வழியறியாது
துடித்து வடித்ததுசெந்
நீரையென் விழிகள்....

நிலைகுத்திய யென்விழிகள்
பாதம்தொட்டு விலகும்
கடல் அன்னையின்
அலைக் கரங்களில் ....

தொட்டு விலகியும்,
மீண்டும் தொட்டுத்
தொட்டு விலகியும்
விடா முயற்சியுடன்

அயராது நீட்டிடும்
கரங்கள் மூலம்
பொட்டில் அறைந்து
உணர்த்தினாள் அன்னை...!!!

தொய்யாது தொடரும்
தொடர் ஓட்டமே
தொடர் வெற்றியின்
தோழ னென்று....

புது உத்வேகத்துடன்
உயிர்த் தெழுந்தேன்
மனதின் மலர்ச்சி
முகத்தில் மிளிர

எட்டி நடைபோட்டு
ஏகாந்தமாய் விரைகிறேன்
எதிரியை வீழ்த்த
ஏந்திழை நான்.....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (9-Sep-24, 8:21 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 52

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே