கஞ்சாலிங்கம்
காவலர் ஒருவர் ஒரு வீட்டின்
கதவைத் தட்டி: யாரய்யா பரோட்டா நிபுணர்
கஞ்சாலிங்கம். வெளில வா.
@@@@
வணக்கமுங்க ஐயா. நாந்தாங்க
கஞ்சாலிங்கம்.
@@@@@@@#
கஞ்சா வியாபாரம் பண்ணறதும் இல்லாம
விளம்பரத்துக்காக, போதை ஆசாமிகளைக்
கவர்ந்து இழுக்க உன் பேரிலேயே 'கஞ்சா'.
உனக்கு எவ்வளவு துணிச்சல்
இருக்கணும்?
#@@######
ஐயா, ஐயா எனக்கு பராட்டோ, சால்னா
தயாரிக்கிறதைத் தவிர வேறெ எதுவும்
தெரியாதுங்க.
@@@@@@@
அப்பறம் எப்பிடிடா நீ கஞ்சாலிங்கம் ஆன?
@@@@@@@
ஐயா நான் பீகார் தலைநகர்ல ஒரு பிரபல
பரோட்டா கடையில் பரோட்டா நிபுணரா
வேலை பார்த்தேன். என் திறமையைப்
பாராட்டி அந்தப் பரோட்டா கடையின்
உரிமையாளர் பர்வேசு மாலிக் அவுரோட
மூத்த பெண் 'கஞ்சா'வை எனக்கு அவுரு
செலவிலேயே திருமணம் செய்து வைத்து
சென்னையில் எனக்கு ஒரு பரோட்டா
கடையை ஏற்படுத்திக் கொடுத்தார். என்
பரோட்டா கடையின் பெயர் 'கஞ்சா
பரோட்டா நிலையம்'.
@@@@@@@
ஓகோ... அதுதான் உன் பரோட்டா கடையில்
மாலை நேரத்தில் ஏராளமான இளைஞர்
கூட்டமா? கஞ்சாவைக் கலந்து கஞ்சா
பரோட்டா கஞ்சா சால்னா தயாரிச்சுத்
விற்பனை செய்யறியா?
@@@@@#
ஐயா. என் மனைவி பேரு கஞ்சா. என் வாழ்
நாளில் இதுவரைக்கும் கஞ்சா எப்படி
இருக்கும்னுகூடப் பார்த்ததில்லை. எனக்கு
என் மனைவி கஞ்சாவைத் தவிர அந்தப்
போதைப் பொருள் கஞ்சாவைத்
தெரியாதுங்க ஐயா. கஞ்சா வெளில
வாம்மா. (ஒரு சிவப்பான அழகான பெண்
வருகிறார்)
@@@@@@@
உன்னோட பேரு என்னம்மா?
@@@@@@
மேரி நாம் கஞ்சா சாகிப்.
@@@@@@@
சரி. சரி. இன்னிக்கு மாலை உன் வீடு
இருக்கும் பகுதி, உன்னோட கஞ்சா
பரோட்டா நிலையம் இருக்கும் பகுதியைச்
சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு
இருக்கும். உன்னோட தயாரிப்பு பரோட்டா
சால்னாவைக் கைப்பற்றி சோதனைக்கு
அனுப்பப்படும். அப்பறம் தெரியும் உன்
வண்டவாளம்டா கஞ்சாலிங்கம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kanja = Bird, a bird, Feminine name.