பருத்தி உடுத்தி சிரித்துநடக்கும் என்காதல் கண்ணம்மா

பருத்திக் காட்டில் பறந்தகிளி பச்சையம்மா
பருத்தி உடுத்தி சிரித்துநடக்கும் நீஎன் கருத்தம்மா
சிறுத்த இடைநோக நெளித்துநெளித்து நடக்கலாமா
வருத்தப் படாதோ ஒடிசலிடை என்காதல் கண்ணம்மா

கருத்த கூந்தல் கருத்தவிழி மின்னல்வெட்டுப் பொன்னம்மா
கருத்த மேகம் சூழுது வானத்தில் பாரம்மா
வெளுத்து வாங்கி நனைத்துவிடும் உன்னைச் சின்னம்மா
விரைந்து நடந்து வீடுபோய் சேரம்மா

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-24, 5:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே