தோழிக்காக ஒரு கவிதை பகுதி 12
எனக்கும் என் தோழிக்கும் விடியல் ஒன்றுதான்
என்றாலும் அர்த்தம் வரவில்லை என் விடியலுக்கு
அவள் நட்பின்றி என்னோடு வாழும் அவள்
நட்பை எல்லா நொடியும் நேசிக்கிறேன்
நிஜமாய் நட்பை சுவாசிக்கிறேன்
பிரிந்ததை நினைக்கவில்லை பிரியும் வரை
தெரியவில்லை நட்பின் அருமை
பிரிவுக்கு நன்றி சொல்கிறேன் அவள் நட்பை
தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாய்
என்றோ ஒரு நாள் சந்திப்போம்
எங்கோ ஒரு மூலையில் அன்றும் அதே
நட்புடன் ஒரு புன்னகை பரிமாறும்
அந்த நாளுக்காக இன்றும் உயிர் வாழ்கிறேன்
அவள் சொல்லாத ஏக்கங்கள் நானறிவேன் நட்பாய்
அவளும் அறிவாள்
ஏனோ அவளை பற்றி கவிதையில் சொல்ல மட்டும்
கண்கள் தானாய் கண்ணீரை சிந்துகிறது
இது நட்பின் பிரிவா உண்மை நேசத்தின் பிரிவா
பிரிக்க தெரிந்த காலத்திற்கு சேர்க்க
தெரியாமலா போகும் காத்திருக்கிறேன்
அவள் உயிர் தோழனாக என்றும்