நட்பின் விளிம்பில் நீயும் நானும்..
தொடர்ந்து வந்த பயணங்களில்
தொலையாத பயணம் நீ
தொல்லைபல நான் செய்தபோதும்
தொடர்ந்து வந்த சொந்தம் நீ
இல்லையென நான் நடித்தாலும்
எனக்காய் துடிக்கும் இதயம் நீ
நான் மூடிவைத்த ரகசியமெல்லாம்
உன்முகம் பார்த்தவுடன் உதிர்த்திடுவேன்
நான் விடைதெரியாமல் தவித்ததெல்லாம்
என்னிடம் எளிதாய் வாங்கி விடைதருவாய்
நானும் நீயும் விதியால் விட்டுப்பிரிந்த
நாட்களில்கூட விடாது தொடர்ந்தது நம்நட்பு
திருமணம்,இல்லறம் என்ற எல்லைக்கோடுகள்
நம்மை அருகிலில்லாமல் பிரித்திருக்கலாம்,
ஆயினும், நம்நட்பை நெருங்கவிடாது
எந்த சக்தியும் பிரிக்கமுடியாது.
நட்பை பிரிக்கும் ஆயுதம்
இதுவரை கண்பிடிக்கவில்லை,
இனி கண்டுபிடிக்கவும் முடியாது.
நட்பை குறை கூறுபவர்களுக்காக
ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்,
உண்மையான நட்பு
என்றும் துரோகம் செய்யாது,
துரோகம் செய்தால், அது
உண்மையான நட்பாக இருக்கவே முடியாது.